அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவினர் அடுத்த மாதம் எதிர்க்கட்சித் தரப்பில் அமருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
பத்தரமுல்லை – செழும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதை நிலை குறித்து கவலையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய ஒன்றரை வருட காலப்பகுதிக்காக புதிய அமைச்சரவை ஒன்றை ஸ்தாபிப்பதானது, நகைப்புக்குரிய விடயமாகும்.
மே மாதம் அளவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எஞ்சியுள்ள உறுப்பினர்களும் தமது தரப்பில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அரசாங்கத்தை வீழ்த்த, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாட்டு மக்களுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment