எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அன்றைய தினம் மேற்கொள்ளப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல என்றும் புதிய அமைச்சரவையே நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கூறினார்.
அதேநேரம் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், அது அரசியலமைப்புக்கு அமைவாக 45 உறுப்பினர்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 06 அமைச்சர்களுக்குப் பதிலாக அதே கட்சியில் இருந்து வேறு 06 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நேற்றைய தினம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், சரியான ஒரு முடிவுக்கு வரும் வரை கலந்துகொள்வதில்லை என்றே அவர்கள் கூறியதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.
Post a Comment