Top News

கிண்ணியா உலமா சபை கிளையின் போதையொழிப்பு செயற்றிட்டம்



நாட்டில் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில்,கிண்ணியாப்பிரதேசத்தில் மிக வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பாவனையை தடுக்குமுகமாக ஜம்இய்யாவின் கிண்ணியா கிளை பரந்த விஷேட செயற்றிட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தும்பணியில் இரங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பிரதேச திணைக்கள தலைமைகள், பிரமுகர்களுடனான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று(14) காலை ஜம்இய்யா காரியாலயத்தில் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் ஏ.எம்.அனஸ், நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்,மஸ்ஜித் நிர்வாகிகள் இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

இதில் சகல தரப்பினருடனும்  
இணைந்து பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதுடன் எதிர் வரும் 2018-4-28 ஆம் திகதி பிரதேசம் தழுவிய போதையொழிப்பு மாநாடு ஒன்றைத்தொடர்ந்து இலக்கு நோக்கிய பல்வேறு முன்னனெடுப்புக்கள் தொடரப்படவுள்ளது 

போதைவஸ்த்துக்களால் அசுத்தமாக்கப்பட்டு ச்செல்லும் நமது கிண்ணியாவை சுத்தப்படுத்தும் இப்பயணத்தில் யாவரும் இணைந்துகொள்வதோடு,மாநாட்டுத்தீர்மாணங்களாகிநடைமுறைப்படுத்த உங்கள் ஆலோசனைகள்...தங்களுக்கு வழங்குமாறு இதன்போதை அழைப்பு விடுக்கப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post