ஈரான் அணு ஆயுத உடன்பாட்டில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விலகுவார் என்று அவரை சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு உடன்பாடு செய்துகொண்டது.
2015-ம் ஆண்டு எட்டப்பட்ட இந்த உடன்பாடு, ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்தி வைக்கவும், அதற்கு பதிலாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டு உள்ள பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ளவும் வழிவகை செய்து உள்ளது.
இந்த உடன்பாட்டில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விலகுவார் என்று அவரை சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் வாஷிங்டனில் கூறுகையில், “ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு உடன்பாட்டில் இருந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உள்நாட்டு காரணங்களையொட்டி விலகி விடுவார் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு உடன்பாடு பைத்தியக்காரத்தனமானது என்று கருதுகிறார்.
அணு ஆயுத தவிர்ப்பு உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகினால், மீண்டும் அணு ஆயுத திட்டங்களை தொடங்கி விடுவோம் என ஏற்கனவே ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “மத்திய கிழக்கு நாடுகளுக்கான புதிய கட்டமைப்பை உருவாக்க நான் முயற்சிப்பேன். ஆனால் அது நல்ல திடமான அஸ்திவாரத்துடன் அமைய வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment