Top News

ரணில் வெளியிட்டிருக்கும் முக்கிய அறிக்கை!

Related image

ஐக்கிய தேசியக்கட்சியில் புதிய தலைமைத்துவ அணியை உருவாக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தலொன்றை இன்று (29) வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

கட்சியின் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், கட்சியின் தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உப தலைவர்களுடன் இணைந்து புதிய உத்வேகத்துடன் செயற்பட்டு, கட்சியின் வெற்றிக்கான அடித்தளம் உருவாக்கப்படும்.

இந்த வெற்றிக்கான பயணத்தை மேலும் வலுப்படுத்த பிரதித் தலைவருக்கு பல பொறுப்புகள் வழங்கப்படும்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விமர்ஷனங்களை முன்வைப்பவர்கள் மற்றும் கட்சி நடவடிக்கைகளை கேலியாக பார்ப்பவர்கள் கட்சிக்குள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலின் போது கட்சிக்காக உழைக்காதவர்கள் எனவும் அவர் அவறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post