பொதுஜன பெரமுணவினால் வெற்றி கொள்ளப்பட்ட சேருவில பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக் கட்சியான பொதுஜன பெரமுண அதிக உறுப்பினர்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் அதன் தவிசாளா் மற்றும் உபதவிசாளர் பதவிகளுக்கான நபர்களைத் தெரிவு செய்யும் போது ஐக்கிய தேசியக் கட்சியும் , சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன.
பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பண்டாரவும், பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சந்திரகாந்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டுள்ளது. தேர்தலில் கூடிய தொகுதிகளை வென்ற பொதுஜன பெரமுண கட்சி எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Post a Comment