Top News

கிண்ணியா பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது: தவிசாளராக கே.எம்.நிஹார்

20180411_120628-1
20180411_114631
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பொருட்டு வெற்றியடைந்த உறுப்பினர்களுக்கான கிண்ணியா பிரதேச சபையின் ஒன்று கூடலானது இன்று (11) கிண்ணியா பிரதேச சபையின் மண்டபத்தில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் பகிரங்க வாக்கெடுப்பில் 12 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எம்.நிஹார் தவிசாளராக தெரிவு செய்யப்படடார்.

இரண்டாம் கட்டமாக வாக்கெடுப்பின்றி ஏகமானதாக பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏ.எச்.எம்.அப்துல் பாஸித் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இவ் வாக்கெடுப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனணி உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் தவிசாளர் தெரிவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவாகவூம் எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் வாக்களித்திருந்தனர்.இச் சபையில் எந்தவொரு கட்சியும் அருதிப் பெரும்பாண்மை பெறாததால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

குறிப்பாக இச் சபையில் மொத்தமாக 15 உறுப்பினர்கள் கொண்ட தவிசாளர் பிரதி தவிசாளர் உட்பட்டவர்களைக் கொண்டு சபை இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பெண் பிரதிநிதிகள் இச் சபையில் மூன்று பெண்களும் காணப்படுகின்றனர்கள் இவ் மூவரில் இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டியல் மூலமும் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சபை முதல் அமர்வின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக்,இம்ரான் மஹ்ரூப் உட்பட உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

ஹஸ்பர் ஏ ஹலீம்

Post a Comment

Previous Post Next Post