வட கொரியா நாடு அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் இன் செய்தி தொடர்பாளர்கள், வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருப்பதாக கூறப்படுகிறது.
தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாகவும், வட கொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்திக்கும் போது இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவும், வட கொரியாவும் இரகசிய மற்றும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் கலந்து கொள்ள இருக்கும் இந்த பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
அமெரிக்க மற்றும் கொரிய பிரச்சனை இதில் தீர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தகவல்களை தெரிவிக்காமல் இரண்டு நாடுகளும் இரகசியமாக வைத்துள்ளன.
ஆனால் இனி அணு ஆயுத சோதனை நடந்த போவதில்லை என்று கிம் அறிவித்து இருந்தார். சோதனை செய்வது மட்டுமில்லாமல் அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது.
அதன்படி இனி புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த கூடாது, ஆணு ஆயுத தயாரிப்பு செய்ய கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ள இருக்கிறார்கள்.
அமெரிக்காவிடம் இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் கூறிய ஒரு வசனத்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் தெரிவித்த கருத்துக்கள் பின்நாட்களில் பூதாகரமாக வெடித்திருந்தன.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறியும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனைகளை செய்து வந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்கும் அபாய நிலை தோன்றியிருந்தது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டால், மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என்று பரவலாக செய்திகள் வெளியாகிய இருந்தன.
இந்த நிலையில் கிம் ஜாங் இற்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றமும், அமெரிக்காவிற்கு விடுத்த நட்பு அழைப்பு தொடர்பிலும் உலக நாடுகளும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.