மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வங்காள தேசத்திற்கு காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலியான நிலையில், உயிரை தற்காத்துக்கொள்ள பல லட்சம் பேர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். வங்காள தேசத்தில் அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை திரும்ப மியான்மருக்கு அனுப்புவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. இருப்பினும், அவர்களை திருப்பி அனுப்புவதில் தாமதம் நிலவுகிறது. இந்நிலையில், லண்டனில் நடந்து முடிந்த காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் வங்காள தேசத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் மதிக்கப்பட்டு ரோஹிங்கியா முஸ்லிம்களை மீண்டும் நாடு சேர்க்க மியான்மர் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிரியாவில் ரசாயண குண்டுகள் பயன்படுத்துவதை கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது என மாநாட்டில் அறிக்கை வாசிக்கப்பட்டது.
Post a Comment