Top News

வட்டியோடு சம்பளம்

Image result for வட்டியோடு சம்பளம்

இலங்கையில் முஸ்லிம்கள் அரசாங்க உத்தியோகத்தில் மகிழ்ச்சியாக செல்கிறோம்.அதே வேலை நாம் அறியாத பாவமும் கலந்து எமக்கு சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. 

வேலையில் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து எமது பனத்தில் ஒரு சிறு தொகை அறவிடப்பட்டு அது வட்டியாக எமக்கு ஓய்வூதியத்தில் கிடைக்கிறது. இது தொடர்பாக முழுதான அறிவு என்னிடம் இல்லை. ஆனால் இப்படி ஒரு விடயம் உள்ளது என்பதை அறிந்ததும் ஆச்சரியப்பட்டேன். நாம் பலர் இதை அறியாமல் இருந்தோமா அல்லது அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தோமா என்று தெறியாது. ஆனால் கட்டாயம் ஒரு தொகை பனம் ஊதியத்தில் இருந்து அறவிடப்படுவதும் அது வட்டியாக ஓய்வூதியத்திலும் போனஸாகவும் கிடைப்பாதக அறிகிறேன். எனவே எமதி சமூகம் இது தொடர்பாக விழித்துக் கொள்ள வேண்டும். 

அதற்காக அரசாங்க வேலையில் இருந்து தவிர்ந்து கொள்ள நான் சொல்லவில்லை. இதை நிதானமாகவும் நூதனமாகவும் உலமாக்கள் ஆய்வு செய்து அணுக வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள். 

இதற்கு தீர்வு என்னிடம் இல்லை. ஆனால் காணும் தீர்வு நிச்சயம் பின்னால் வரும் எமது உம்மத் மடத்தனம் செய்ததாக கருதிவிடாத அளவு நுனுக்கமாக முடிவெடுத்தல் வேண்டும்.

அவர்கள் மாதா மாதம் அறவிடம் தொகையை நாம் அரசாங்கத்து இனமாகவோ அல்லது வரியாகவோ தந்து விடுகிறோம் என்று அறிவித்தால் வட்டியும் எம்முடன் கலப்பது நின்று விடும். இப்படி முஸ்லிம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து முடிவெடுத்தால் நிச்சயமாக இந்த அரசாங்கம் வரவேற்கும் . காசு சும்மா கிடைத்தால் எந்த அரசாங்கம்தான் வாய் பிளக்காது. 

எனவே இஸ்லாமியர்கள் மார்க்கப்பற்று ஏனைய மதத்தோர் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அடுத்து நாம் இனாமாகவோ வரியாக அவர்களுக்கு கொடுக்கும் பனத்துக்கு பகரமாக வங்கிகள் வட்டியில்லா கடனை எமக்கு தர வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யலாம் .எனவே எமது சமூகமும் வட்டியில் இருந்து கொஞ்சம் விடு படும். 

அடுத்து இது ஓய்வூதியத்தில் எந்த அளவு தாக்கம் செலுத்தும் அதன் விளைவுகள் என்ன என்பதையும் நுனுக்கமாக ஆராய்ந்து இந்த சமூகம் இந்த வட்டி விடயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். எனவே எமது சமூகம் விழித்துக் கொள்ளுமா ... உலமாக்கள் ஆய்வு செய்வார்களா? 

எஸ்.சிறாஜ்

Post a Comment

Previous Post Next Post