கண்டி மாநகரசபைக்கு மேயர் மற்றும் பிரதிமேயர்களாக ஐ.தே.க.யினர் திறந்த வாக்கெடுப்பில் தெரிவாகினர்.(5.4.2018 மாலை)
கண்டி மாநகர சபைக்கு மநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் கண்டி மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
அதன் போது மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட வேண்டும் என இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
அதனை அடுத்து பகிரங்கமாகவா, இரகசியமாகவா வாக்கெடுப்பு நடத்துவது என்ற பிரேணை தொடர்பாக 41 அங்கத்தவர்களில் 20 பேர் பகிரங்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் 16 பேர் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஐவர் வாக்ககெடுப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் பிரதி மேயருக்கும் இதே விதம் இரண்டு பெயர்கள் முன்வைககப்பட்டு பகிரங்க வாக்களிப்பு வேண்டும் என அதே அங்கத்தவர்கள் அதே அடிப்படையில் விருப்புக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகளை அடுத்து இடம் பெற்ற வாக்களிப்புக்களில் ஐ.தே.க.ஐ பிரதி நிதித்துவப் படுத்தும் கேசர சேனாநாயக்கா 20 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொதுஜன பெரமுன அங்கத்தவர் சேன திசாநாயக்கா 16 வாக்குகளையும் பெற்றனர்.
5 பேர் வாக்களிப்பில் பங்கு கொள்ள வில்லை.
பிரதி மேயர் பதவிக்கு துவான் இலாஹி ஆப்தீனின் பெயரும் சரத் விஜேசிங்கவின் பெயரும் முன் மொழியப்பட்டன.
ஏற்கனவே வாக்களித்த அதே அடிப்படையில் அங்கத்தவர்களின் தெரிவு காணப்பட்டது. எனவே இலாஹி ஆப்தீன் 20 வாக்குளைப் பெற்று 4 மேலதிக வாக்குகளால் பிரதி மேயரானார்.
இம்முறை கண்டி மாநகர சபையில் சிறப்பம்சமாக 9 பெண்கள் தெரிவாகி இருந்தனர் அதில் ஒரு முஸ்லிம் பெண்மணியும் (சித்தி மஸ்தூரா-கட்டுகாஸ்தோட்டை) தெரிவாகியுள்ளார்.