லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் ஸ்ரீலங்கா அமைப்பின் 25 வருட நிறைவை முன்னிட்டு இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இமயம் கலைக்கூடல் மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள கிழக்குச் சீமையிலே-2018. வெள்ளி விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(21) கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
லக்ஸ்டோ மீடியா அமைப்பின் தலைவர் கலைஞர் ஏ.எல்.அன்ஸார் மற்றும் இமயம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவி ஸப்னா அமீன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே.ஸ்ரீதர், இலங்கை வானொலி பிறை எப்.எப். கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம், கெபிடல் எப்.எம்.வானொலியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஏ.எல்.ஜபீர், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்
நிகழ்வில் சிலோன் முஸ்லிம் ஸ்தாபகர் பஹத் ஏ.மஜீத், பணிப்பாளர் சபை உறுப்பினர் எம் ஏ.றமீஸ் ஆகியோருக்கு தேச அபிமானி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன்போது கலை இலக்கிய மற்றும் சமூக சேவைத் துறையில் பல்லாண்டு காலமாக சேவையாற்றிய தெரிவு செய்யப்பட்டோர் திறமைக்கான தேடல் விருது வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், நேசம் பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நற்பிட்டிமுனை வரலாறு மற்றும் இமைகள் மூட விடாதிருக்கும் கவிதைத் தொகுதி ஆகியவற்றின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றதுடன் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment