முஹம்மட் நசீட்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இலங்கை முஸ்லிம்களின் அடையாளம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என கட்சியின் பீரங்கி பேச்சாளர் அன்வர் நௌசாத் குறிப்பிட்டுள்ளார்.
சிலோன் முஸ்லிமிற்கு வழங்கி சிறப்பு செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார், உள்ளுராட்சி ஆட்சியமைப்பு சம்பந்தமான எமது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனிநபரின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டது, கட்சியின் முடிவு என்பது சமூகத்தின் முடிவு இதனை யாரும் மறுப்பதற்கில்லை, முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம் காங்கிரசிடமே அரசியல் ரீதியாக பேசப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு டிமாண்ட் இருக்கிறது. நாங்கள் இந்த நாட்டில் சமாதான முறையில் வாழ ஒற்றுமைப்படவேண்டிய சூழலுக்கு கட்டாயமான தள்ளப்பட்டுள்ளோம்,
முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையி்ல் உருவானால் மாத்திரமே அக் கூட்டமைப்பால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றார்.