Top News

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் முஸாபர் அஹமது கான்,





அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

காஷ்மீரை சேர்ந்த, 9 வயது சிறுவன், எழுதும்போதே, எத்தனை வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன என்பதை கணக்கிடும் பேனாவை கண்டுபிடித்து, சாதனை படைத்துள்ளான்.

ஜம்மு - காஷ்மீரில், குரேஸ் பகுதியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன், முஸாபர் அஹமது கான், 9.இந்த மாணவன், எழுதும்போது, வார்த்தைகளை கணக்கிடும் அதிசய பேனாவை கண்டுபிடித்துள்ளான். இந்த பேனா கணக்கிடும் வார்த்தைகளின் எண்ணிக்கை, அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள சிறிய, எல்.சி.டி., மானிட்டரில் தெரியும்; மொபைல் போனில், தகவலாகவும் தோன்றும்.

இதுகுறித்து, முஸாபர் அஹமது கான், நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு முறை தேர்வின்போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வார்த்தைகளை பதிலாக எழுதாததால், குறைந்த மதிப்பெண் கிடைத்தது. இதனால், மிகவும் வருத்தப்பட்டேன். அப்போதுதான், வார்த்தைகளை கணக்கிடும் பேனாவை கண்டு பிடிக்கும் யோசனை, மனதில் உதித்தது.இவ்வாறு முஸாபர் கூறினான்.சமீபத்தில், ஜனாதிபதி மாளிகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின், என்.ஐ.எப்., எனப்படும், தேசிய கண்டுபிடிப்புகள் அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சியில், முஸாபரின் பேனா,பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதை பார்த்து ஆச்சரியப்பட்ட ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், மாணவன் முஸாபரின் திறமைகளை புகழ்ந்து பேசினார்.இந்த பேனாவை சந்தைப்படுத்தி விற்க, என்.ஐ.எப்., திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம், இந்த பேனா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post