Top News

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜௌபரின் முயச்சியால் தோணா பிரதேசம் சுத்தமாகியது!!!


எம்.வை.அமீர் 
கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேச தோணாவை அண்மித்த பிரதேசங்களில் முறையாக கழிவுகள் அகற்றப்படாமையின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் எம்.வை.எம். ஜௌபர் எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாக மிகுந்த அசுத்த நிலையில் இருந்த குறித்த பிரதேசம் 2018-04-18 ஆம் திகதி மாநகரசபையின் உறுப்பினர் ஜௌபரின் நேரடிக் கண்காணிப்பில் மாநகரசபையால் சுத்தம் செய்யப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜௌபர்,
மிக நீண்ட காலப்பிரச்சினைகளில் ஒன்றான கழிவகற்றல் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான முயச்சிகளை தான் எடுத்து வருவதாகவும் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட சில பிரதேசங்களில் கழிவுகளை போடக்கூடியவாறு பொட்டிகளை இட முயச்சிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் விடயத்தில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் நினைத்த இடங்களில் எல்லாம் கழிவுகளை வீசுவதன் ஊடாக நமது பிரதேசமே மாசுபடுவதாகவும் அந்த விடயங்களில் பொதுநோக்குடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் விடயத்தில் பொதுமக்களின் ஆலோசனைகளும் அவசியம் என்று தெரிவித்த ஜௌபர், எதிர்காலத்தில் மாநகரசபையின் அதிகாரத்துக்குள் மக்களுக்குச் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் செய்ய திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post