Top News

கல்முனையிலுள்ள முஸ்லிம்களின் செயற்பாட்டிற்காக வருந்துகிறேன்!




முதற்கண் கல்முனை பிரதேச நாற்பெட்டிமுனையில் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்திய ஈனச் செயலுக்காக நான் எனது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்து கொள்கிறேன்.

சில முஸ்லிம்கள் நடாத்திய கேவலமான அசிங்கமான கூச்சப்படக் கூடிய வெட்கம் கெட்ட ஈனச் செயலுக்காக கல்முனையின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நானும் ஒரு முஸ்லிம் என்ற பார்வையில் முதற்கண் நான் ஒட்டு மொத்த தமிழ் மக்களிடம் பெருத்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கின்றேன்.

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஹக்கீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பெரும் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இரண்டொரு சபையையாவது பெற்று விடலாமா என்ற நப்பாசை கௌரவப் போராட்டத்தில் ஹக்கீம் காங்கிரசின் மானம் கல்முனையில் அட்டாளைச்சேனையில் காப்பாற்றப்பட்டுள்ளது.

அம்பாறையில் ரிசாத் அணியின் முன்னேற்றத்தை விரும்பாத அதாவுல்லா, அட்டாளைச்சேனையில் ஹக்கீம் காங்கிரஸ் குலுக்கலில் தலைவர் பதவியை தட்டிக் கொண்டது. ஆனால் ரிசாத் தனது மயில் சின்னத்தில் தானாக முன்னேறி வருகின்றார்.

அமைச்சர் ஹரிசின் பெருத்த முயற்சியினால் கல்முனையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் கல்முனை மேயர் பதவி ஹக்கீம் காங்கிரசுக்கும் பிரதி மேயர் தமிழ் கூட்டமைப்புக்கும் கிடைத்துள்ளது. கல்முனையில் எப்போதும் கீரீயும் பாம்பும் போன்று கல்முனை மாநகர சபையில் தமிழர் தரப்பும் ஹக்கீம் தரப்பும் விட்டுக் கொடுக்காமல் கடந்த காலங்களாக மோதிக் கொண்டே வந்தார்கள். இப்படியான நிலையில்தான் ஒரு சந்தர்ப்பவாத இணைவாக தமிழ் கூட்டமைப்புடன் எவ்விதமான மனம் நிறைந்த விருப்பமுமில்லாது ஹக்கீம் காங்கிரஸ் தோல்வி என்னும் அவமானத்தில் இருந்து விடுதலை பெறுவதற்காக கல்முனையில் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து பிரதி மேயரை கொடுக்கும் இணக்கப் பேச்சுவார்த்தையில் இந்த இணைவு வந்துள்ளது.

அமைச்சர் ஹரீசுக்கு பாராட்டுக்கள்

கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும் பான்மை என்ற தெனாவெட்டினால் எப்போதும் தமிழ் முஸ்லிம் இன முறுகல் இருந்து கொண்டே இருக்கும் இப்போது ஹக்கீம் காங்கிரஸ் இணைந்தள்ள நிலையில் அடிக்கடி சமாதானத்தை கல்முனையில் காணலாம்.

தமிழ் முஸ்லிம் இணக்க அரசியலுக்கு நல்லதொரு பாதை கல்முனையில் திறக்கப்பட்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை தழிழ் தரப்பும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் நன்றாகப் பயன்படுத்தக் கூடிய நல்ல வாய்ப்பு. தமிழ் முஸ்லிம் இணைவதை ஒரு போதும் சிங்களம் விரும்பாது.ஆனால் அதிபர் மைத்திரி காலத்திற்குள் இந்த இரண்டு இனங்களும் அரசியல் ரீதியாக இணைந்து செல்லக் கூடிய நல்ல நிலமை வந்துள்ளது.

ஹக்கீம் காங்கிரசைப் பொறுத்த மட்டில் இதுவொரு மேயர் பதவிக்காக இணைந்த கதை. ஆனால் முஸ்லிம்களின் எதிர்காலம் கருதி அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் நலன்கருதி தமிழ் தரப்புடன் அரசியல் செய்ய வேண்டிய தேவை தொக்கி நிற்கின்றது. ஒரு மேயர் பதவிக்காக ஹக்கீம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்புடன் இணையுமானால் நாம் இரண்டு எம்பிக்காக ஏன் இணைய முடியாது.

தமிழ் தரப்புடன் ஒரு போதும் இணைய முடியாது என்று கொக்கரித்த ஹக்கீம் காங்கிரஸ் ஒரு மேயர் பதவிக்காக இணைந்துள்ளது கேவலம்.
நாற்பெட்டிமுனையில் தமிழர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டத்திற்காக உண்மையாக ஹக்கீம் காங்கிரஸ் காரர்கள் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும் மற்றது இந்த ஆர்ப்பாட்டம் அமைச்சர் ரிசாத் அணியினால் செய்யப்பட்டுள்ளது என்றால் அமைசச்ர் ரிசாத் அணியினால் மன்னிப்புக் கோர வேண்டும்.யாருமே இதுவரை ஒரு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் தமிழர்களும் முஸ்லிம்களும் எப்போதும் கீரியும் பாம்புமாக இருக்க வேண்டும் என்பது இந்த அரசியல் வியாhபாரிகளின் விருப்பம் ஆசை என்பது நமக்கு இன்னுமா புரியவில்லை.

தமிழ் முஸ்லிம் எப்படி இணைய வேண்டும்

தமிழ் முஸ்லிம் இணைவு என்பது இப்படி ஒரு மேயருக்காக இணைவது அல்ல. அம்பாரை மாவட்டத்தில் ஹக்கீம் காங்கிரசுடன் தமிழ் தரப்பு இணைந்து மரச்சின்னத்திலும் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் வடக்கில் வீட்டுச் சின்னத்தில் முஸ்லிம்கள் போட்டியிட்டு நமது ஒற்றுமையை காட்ட வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் ஹக்கீம் காங்கிரஸ் அணியிலும் தமிழா்கள் பொரும்பான்மை கொண்ட சகல பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

இப்படியாக இணைந்து போட்டியிடும் போது இரண்டு தரப்புக்கும் நன்மையுண்டு. இப்படியான திட்டத்தில் ஹக்கீம் காங்கிரஸ் செயல்பட்டால் அம்பாறையில் தமிழ் தரப்புக்கு இரண்டு எம்.பி கிடைக்கும். ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கூட்டமைப்பின் சுமார் 10-12 ஆயிரம் வாக்குகள் சும்மா வீணாகப் போகின்றது. சில விட்டுக் கொடுப்புடன் இரண்டு தரப்பும் செயல்பட்டால் வடகிழக்கில் நல்ல நிலை உருவாகும்.

ஆனால் கண்டியில் சிங்களப்படையினர் முன்னிலையில் சிங்களக் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்கி கண்டி முஸ்லிம்களின் வர்த்தகத்தை சொத்துகளை அழித்துள்ளதை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணிலைக் காப்பாற்ற அவருக்கு எதிராக கொண்டு வந்த குற்றப் பத்திரிகையை எதிர்த்து ரணிலைக் காப்பாற்றியுள்ள ஹக்கீமை இன்னுமா இந்த முட்டாள் சமூகம் நம்புகின்றது.

தனக்கு வாக்களித்த கண்டி முஸ்லிம்களின் பாதிப்புக்களைப் பற்றி கணக்கே எடுக்காமல் அந்த மக்களை உதாசீனம் செய்து கண்டி முஸ்லிம்களை அவமானப்படுத்தி விட்டு சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணிலை எதற்காக ஹக்கீம் காப்பாற்றியுள்ளார்.

இப்படியான ஹக்கீமை நம்பி அம்பாறை முட்டாள் முஸ்லிம்கள் ஏமாறட்டும். ஆனால் ஈழத்தில் மனித் உரிமை மீறல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை படையினர் யாரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று மஹிந்த ஆட்சிக் காலத்தில் நீதி அமைச்சராக இருந்த ஹக்கீம், அப்போதைய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மஹிந்த அரசையும் சிங்களப் படையினர் பற்றிய நற்சான்றிதழ் கொடுத்தவர்தான் ஹக்கீம்.

மற்றும் மஹிந்த அரசைக் காப்பாற்றுதற்காக ஹக்கீம் ஜெனீவா சென்று முஸ்லிம் நாடுகளிடம் ஆதரவு தேடி மஹிந்த அரசைக் காப்பாற்றியவர்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் அளுத்கம. வேருவளை பகுதிகளில் சிங்களம் நடாத்திய தாக்குதலை அது ஒன்றுமில்லை தெருச்சண்டை என்று நவநீதம்பிள்ளையிடம் சொன்னவர் ஹக்கீம். தான் சார்ந்த சமூகத்தின் மக்களையும் காப்பாற்ற முடியாத, தனக்கு வாக்களித்த கண்டி முஸ்லிம்களையும் காப்பாற்ற முடியாத ஹக்கீம் தமிழ் மக்களுக்கு ஈழம் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்.

மிகவும் மோசமான பதவி ஆசை பண ஆசை மோகம் கொண்ட முஸ்லிம் அரசியல் வியாபாரிகளின் பிடியில் முட்டாள் முஸ்லிம் இனம் சிக்குண்டு தவிக்கின்றது. ஏமாந்த சிறிலங்கா சோனகர்கள். முதலில் ஹக்கிம்; என்னும் தேசிய அரசியல் வியாபரியிடம் இருந்து சிறிலங்கா சோனகர்கள் விடுதலை பெறவில்லை என்றால் சிறிலங்கா சோனகர்களை இறைவனும் காப்பாற்ற மாட்டான்.

ஆக ஒரு பிரதி மேயருக்காக எவ்விதமான இணக்கப்பாடும் இன்றி தமிழ் கூட்டமைப்பும் ஹக்கீம் காங்கிரசுடன் இணைந்துள்ளது. இந்த இணக்கத்தில் மக்கள் நலன் ஏதும் உள்ளதா? ஆக கூட்டமைப்பும் பதவி மோகத்தில் சிக்கி விட்டது. முஸ்லிம் அரசியல் வியாபாரிகளிடம் இருந்து பதவி மோகத்தை கூட்டமைப்பும் கற்றுக் கொண்டு விட்டது.

மஹிந்த காலத்தில் அளுத்கம - பேருவளை, மைத்திரி ரணில் காலத்தில் அம்பாறை - கண்டி எதிர்வரும் காலத்தில் குருணாகல் - புத்தளம் யாரின் காலத்தில் தாக்கப்படும்.
Previous Post Next Post