சிரியா அரசாங்கத்திடம் உள்ள இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மற்றும் அந்நாட்டு விமானப்படை முகாம் என்பவற்றை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்துமாறு அமெரிக்க இராணுவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிரியாவின் கூடா மாகாணத்தின் டோமா நகர் மீது அண்மையில் சிரியா அரசாங்கம் மேற்கொண்ட இரசாயனத் தாக்குதலின் பின்னர் சிரியா ஜனாதிபதி பசீர் அல் அஸாத் தலைமையிலான அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எதிர்ப்பு பலமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
டிரம்பின் உத்தரவின் பிரகாரம் சிரியாவுக்கு அப்பால் கடற் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க யுத்தக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணைத் தாக்குதல் நடாத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்க பிரித்தானியாவும், பிரான்சும் முன்வந்துள்ளது.
சிரியாவின் ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பதோ, விலகுவதோ குறித்து தங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லையெனவும் சிரியாவின் அப்பாவி மக்களுக்காகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரித்தானிய பிரதமர் தெரேஷா மே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Post a Comment