Top News

மஹிந்தவின் முட்டாள் தனமான யோசனை: ஏ.எச்.எம்.பௌசி




தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் 2020 இற்குள் நல்ல தீர்வினை முன்வைப்பார்கள். அதற்கான ஆலோசனைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பௌசி வடமாகாண பாடசாலை, நூலகங்கள் மற்றும் சமூகமட்ட நூலகங்களுக்கான நூல்களை விநியோகம் செய்திருந்தார்.
அதன்பின்னர், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிடின் நிர்வாக முடக்கங்களை முன்னெடுப்போம்” என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலும் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுப்பதைப் போன்று பொதுத் தேர்தலை நடாத்த முடியுமான? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்றும் பௌசியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் தெரிவித்த அவர்,
“தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டுமென்றும் அரசாங்கம் அபிப்பிராயம் வைத்துள்ளதுடன், ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதுடன், அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமது நேரத்தினையும் செலவழிக்கின்றார்கள்.

எனவே 2020ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பார்கள் என எண்ணுகின்றேன்.

அத்துடன், மஹிந்தவின் யோசனை மடத்தனமான யோசனை. தற்போது அரசாங்கத்தினை கலைக்க முடியாது. அரசாங்கத்தினை கலைக்காது எவ்வாறு பொதுத் தேர்தலை நடத்த முடியும்.

அது நடக்கின்ற விடயம் அல்ல. 2020ஆம் ஆண்டு வரைக்கும் அரசாங்கம் நீடிக்கும் என்றும், எதிர்வரும் 08 ஆம் திகதிக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் சக்தி வாய்ந்த அரசாங்கமாக செயற்படுமென்றும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post