அத்துடன், புதிய நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை மேலும் பலப்படுத்துவேன். இது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றுள்ளது.
கட்சியின் முக்கிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நேற்றைய கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எமது கட்சிக்குள் சில முரண்பாடுகள் இருந்தபடியால்தான் கட்சியை முழுமையாக மறுசீரமைத்துள்ளேன். கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எனது இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது. புதிய நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை மேலும் பலப்படுத்துவேன். இது உறுதி.
நாட்டில் மூவின இனத்தவர்களும் எமது கட்சியை ஆதரிக்கின்றார்கள். எனவே, மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் நாம் இன - மத வேறுபாடுகளின்றி ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்.
சர்வதிகார ஆட்சிலிருந்து நாட்டு மக்களினால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்துள்ளார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.
நாடாளுமன்றில் அண்மையில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது எனக்காக ஓரணியில் நின்று அந்தப் பிரேரணையைத் தோற்கடித்த எமது கட்சி உறுப்பினர்களை நான் மறக்கவேமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
Post a Comment