Top News

ஜெனீவாவில் உதயமாகியது இலங்கை முஸ்லிம் டயஸ்போரா; அனைத்து நாடுகளிலும் கிளைகள்



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இம்பெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக சர்வேத அழுத்தங்களை கொடுக்கும் பிரதான அமைப்பாக இலங்கை முஸ்லிம் டயஸ்போரா இயங்கவுள்ளதாக ஜெனீவாவை தலைமையகமாக கொண்ட SL MUSIM DIASPORA அமைப்பு ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தகாலமாக நமது நாட்டில் கொடிய யுத்தம் ஒன்று இடம்பெற்று முடிவடைந்துள்ளது, அந்த யுத்தகலத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர்,

இலங்கை அரசுக்கு அதிகமதிகம் ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்களை புலிகள் கொன்று குவித்தனர், இருப்பிடங்களை விட்டு துரத்தினர் இவற்றை எல்லாம் தாங்கிகொண்ட முஸ்லிம்கள் இலங்கையர் என்ற ஒரு நம்பிக்கையில் வாழ்ந்துவந்தனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற ஒரு காரணத்தினால் இரு பெரும்பான்மை இனங்களும் சீண்டவே எத்தனிக்கின்றனர், ஒல்லாந்தர் போர்த்துக்கீசர் காலத்திலிருந்து இன்று வரை முஸ்லிம்ளுக்கு எதிராக சிறிய மற்றும் பெரிய கலவரங்கள் இடம்பெற்று வந்துள்ளது.

இதனை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சக்தியின் துணை தேவை, மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பிய - ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட முஸ்லிம்கள் ஆதிக்கமாகவுள்ள நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் அதனை செயற்படுத்த புலம்பெயர் அமைப்பு ஒன்று எந்த வேளையிலும் இயங்க வேண்டும்.

வெவ்வேறு பெயர்களில் சிறிய சிறிய குழுவாக இயங்காமல் SL MUSIM DIASPORA என்ற பெயரில் அனைத்து நாடுகளிலும் இனி இயங்குவது என்ற கோட்பாட்டிற்கு அனைத்து புலம்பெயர்  முஸ்லிம் அமைப்புகளும் முடிவுக்கு வந்துள்ளோம். அதனடிப்படையில் ஐ.நா மனித உரிமை அமைந்துள்ள ஜெனீவாவில் இருந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வுள்ளோம் என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post