ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அதிபராக கடமையாற்றி தனது நிருவாக திறமையினால் அதனை தேசிய பாடசாலை இருக்க வேண்டிய நிலைக்கு உருவாக்கியவரும், கோட்டக்கல்வி அதிகாரி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர், பதில் கல்வி பணிப்பாளர் என்ற கல்வி ரீதியான உயர் பதவிகளுக்கு அப்பால், கல்குடாவின் அரசியலினை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை தலைவராகவும் கல்குடா சமூகத்தினால் அழகு பார்க்கப்பட்டு வருகின்றார்..
ஆகவே எதிர் கால அரசியலில் கல்குடாவினுடைய அரசியல் தலைமையான பிரதி அமைச்சராக அமீர் அலியாக இருந்தாலும் சரி - மாற்று அரசியல் செய்கின்ற எதிரணியாக இருந்தாலும் சரி கல்குடாவின் எதிர் கால அரசியலை படித்த சமூகத்தினை மையப்படுத்தி சகல மக்களுக்கும் தூய அரசியல் கலாச்சாரத்தினையும், அரசியல் சமூக சேவைகளையும் எதுவித பாகுபடுமின்றி வழங்குவதற்கு இஸ்லாமிய சிந்தனையுடனான தூய நடை முறை வாழ்க்கையினை கடைப்பிடித்துவரும் மரியாதைக்குறிய அல்-ஹாஜ் ஜுனைட் அவர்களை கல்குடாவினுடைய அரசியல் சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்ப்பதற்காகன தூர நோக்கு சிந்தனையுடனான சிறந்த முடிவினை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.
அதிலும் மிக முக்கியமாக வருகின்ற எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபை தேர்தலுக்கு அல்-ஜுனைட் அவர்கள் சமகால அரசியலும் மிகப்பொருத்தமானவர் என்பதனை கருத்தில் எடுக்கப்படுவதே இதனுடைய முக்கிய நோகமாக நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
Post a Comment