Top News

.அக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு மாநகர மேயரிடம் முறையீடு

பைசல் இஸ்மாயில் 

அக்கரைப்பற்று மாநகர சபையின் வடக்கு புறம் மிகப் பாரிய அளவிலான காணி அபகரிப்புகளும், அரச காணிகளை கையகப்படுத்துகின்ற வேலைகளும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாகவும் இதன் காரணமாக அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தை இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மையம் அக்கரைப்பற்று மாநகர முதல்வரின் கவனத்திற்க்கும், நகர அபிவிருத்தி அமைச்சு, காணி அமைச்சு, சுற்றாடல் வள அமைச்சு, ஜனாதிபதி செயலகம், பிரதமர், நீர்பாசன அமைச்சு, பொலீஸ் தலைமையகம் என்பவறிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கடந்த காலங்களில் அக்கரைப்பற்று மாநகர சபையினுடைய உப்பளம் என வர்ணிக்கப்பட்ட நீர் ஏந்தும் பிரதேசமானது வியாபார நோக்கில் காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டு நிரப்ப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை பிரதேச அரசியல் தலைமைகளின் கவனத்தில் கொள்ளப்படாமை உடனடியாக தீர்வு காண முடியாமல் போனது.
இருந்த போதும் அதனை அண்டி இருந்த பொது மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு விளையாட்டு மைதானமாக இருந்த மைதானத்தினுடைய எல்லைகள் விசமிகள் கையகப்படுத்துவதும் அதன் எல்லைகளை உள் வாங்கி மதில்கள் அமைக்கப்பட்டு அக்கரைப்பற்றின் விளையாட்டை சீர்குலைககும் நடவடிககைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை தீர்க்க அவசரமாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அரசியல் பேதங்கள் இன்றி உடனடியாக நிலமற்ற நிலையில் காணப்படும் அக்கரைப்பற்று மாநகர சபையினுடைய அரச காணிகளையும், மைதானத்தையும் மீட்டு தர வேண்டும் இல்லையெனில் பொதுமக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு களத்தில் இறங்க வேண்டி வருமெனவும் அந்த அமைப்பு வேண்டிக் கொள்கிறது.

Post a Comment

Previous Post Next Post