அத்தனகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை பணி நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, தற்பொழுது இராஜினாமா செய்துள்ள 16 பேரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டாக இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு புறம்பாக துமிந்த மற்றும் மஹிந்த அமரவீர செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியே இவர்களை பதவி நீக்குமாறு கூறி கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment