Top News

கொழும்பு எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் !



சுமார் 5 வருடங்களாக பல சமூக கல்வி மேம்பாட்டு திட்டங்களை செய்துவருவதுடன் கல்வித்துறையில்  பல புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும் கொழும்பு எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு அல்லியன்ஸ் சர்வதேச பல்கலைக்கழகமும், மலேசியாவின் லின்கோன் பல்கலைக்கழகமும் , இந்தியாவின் பாருள் பல்கலைக்கழகமும், அவர்களின் பட்டப்படிப்புகளையும், பட்டமேற் படிப்புக்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளன.


இலங்கையின் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியினை தொடர முடியாதவர்களுக்கும், அனுமதி கிடைக்காதவர்களுக்கும், இது ஒரு நல்ல வாய்ப்பாகும். 

மேலும்,இன்றைய மாணவர்கள்  குறைந்த  பெறு பேறுகளை பெற்று என்ன செய்வதென்று அறியாமல் தன் கல்விப்பயணத்தை அத்தோடு  இடை நிறுத்தி விடுகின்றனர்....

உங்களுக்கு கிடைத்த சிறு பெறுபேற்றால், உங்களாலும் வாழ்க்கையில் கல்விப்பயணத்தை உயர் மட்ட படிப்புக்கள் வரை தொடர முடியும்.. மேலும் இப் பாடநெறிகளை வீட்டில் இருந்தவாரும் கற்க முடியும்.

மருத்துவம், பொருளியல், வணிகம், உளவியல், கணக்கியல், கல்வியியல் , சட்டம், இஸ்லாமியக் வங்கித்துறை, போன்ற சுமார் 25 பாடநெறிகளுக்கான அங்கீகாரம் எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டவையாகும்.

இந்த பாடநெறிகளை உள்நாட்டிலும் அல்லது வெளிநாட்டிலும் பயிலலாம்.
இரண்டாவது வருடம் மாணவர்கள் uk, usa , australia , newzealand, canada , malaysia  போன்ற நாடுகளிலும் உயர்கல்வியினை தொடரலாம்.

சென்ற மாதம் அங்குரார்ப்பண  நிகழ்வு DEHIWELA , SDS  ஜெயசிங்க்கே மண்டபத்திலே பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியது என இக் கல்லூரியின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரைக்கார் அவர்கள் கூறினார்கள்.

மேலும் எமது நாட்டில் வறிய மாணவர்களுக்கும் பல கல்வித்துறைகளில் பயணிக்க பல சலுகை கட்டண சேவைகளையும் எமது எமேசன் உயர்கல்வி நிறுவனம்  வழங்கி வருகிறது.

இப்பாட நெறியில் இணைய விரும்பும் மாணவர்கள், அல்லது எம்மோடு இணைந்து உங்களது ஊர்களில் இந்த வாய்ப்புக்களை ஆரம்பிக்க விரும்புகின்றவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
Previous Post Next Post