Top News

முஸ்லீம் ஆசிரியைகள் பாடசாலைக்கு ஹபாயா அணியக் கூடாது:திருகோணமலை ஸ்ரீ.ச.இ கல்லூரி முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்







திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் இன்று  (25) புதன்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பாடசாலையின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


அண்மைக்காலமாக முமு ஆடையணிந்த முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப்பாடசாலைகளின் வருகையும் அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒமுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இப் பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன் இப்பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது.

இது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

ஒமுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சனையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ் வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன் எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது
ஆரம்ப நிலையில் இப் பிரச்சனையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம்.

இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு இன்று நடை பெற்ற கவனயீர்ப்பின் போதான ஆதங்கங்களை தமிழ் தரப்பினர்கள் முஸ்லீம் ஆசிரியைகளுக்கு தங்களது பாடசாலையில் கற்பிப்போரை குறிவைத்தே இந்த போராட்டாம் நடை பெற்றது இதனால் முஸ்லீம்களுக்குள் இவ்வாறான இனவாத விசத்தை கக்கும் இவ்வாறான போராட்டங்கள் தமிழ் முஸ்லீம்களுக்குள் இருக்கும் இனவாதத்தை துாண்டும் செயலாக அமைகிறது.

இவ் விடயம் தொடர்பிலான முஸ்லீம் ஆசிரியைகளின் தமிழ் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகள் ஹபாயா அணிவது அவர்களுக்குள்ள மதச் சுதந்திரம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.இதற்கான அனைவரும் சமூக நலன் கருதி இனவாத மதவாதமற்ற கல்விச் சமூகத்தை ஏற்படுத்த முஸ்லீம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.

இது விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் முஸ்லீம் அரசியல் தலைமைகள் இதற்கான சுமூகமான தீர்வை எமது முஸ்லீம் ஆசிரியைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.இதனால் குறித்த ஆசிரியைகளின் மன உளைச்சளுக்கும் இவ்வாறான விடயங்களால் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post