மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புணாணை 118 ஆவது மைல் கல்லுக்கு அருகாமையில் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவருக்கு சொந்தமான சொகுசு பஸ் கல்முனைக்கு சென்று அங்கிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக கல்முனை நோக்கி பயணித்த சமயமே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நடத்துனர் எம்.றபீக் என்பவர் கருத்து தெரிவிக்கையில்-
நானும் பஸ் உரிமையாளரும், சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவரும் கல்முனைக்கு சென்று கொண்டிருந்த போது புணாணை பிரதேசத்தில் வைத்து பஸ்ஸிற்கு ஒருவர் கல்லால் எறிந்தார். இதனை அவதானித்த சாரதி பஸ்ஸை வீதியோரமாக நிறுத்திய போது பஸ்ஸிற்கு அருகில் வந்த நால்வர் என்னை தாக்கி விட்டு பஸ்ஸிற்கு பெற்றோல் ஊற்றி தீயிட்டு விட்டு இரண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் பஸ் உரிமையாளரும், சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார மற்றும் பஸ் நடத்துனரான எம்.றபீக் ஆகியோரை விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment