சவுதி அரேபியாவில் சமையல் எரிவாயு விலை குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் உலக சந்தையில் அதிகரித்துள்ளது என்ற போர்வையில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளதனால் மக்கள் இன்னும் சிரமத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சரியாக “ரொபோ” இயந்திரம் போன்றுள்ளது. ஈவிரக்கம் இன்றி செயற்படுகின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தவுடன் உணவு வியாபாரிகள் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கின்றனர்.
சமையல் எரிவாயு கட்டணம் மாத்திரமல்ல, மின்சாரக் கட்டணம், குடிநீருக்கான கட்டணம் போன்றவற்றையும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி இந்த அரசாங்கம் விரைவில் அதிகரிக்கத்தான் போகின்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment