சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தாக்குதல் நடாத்தினால் பாரிய அழிவொன்று ஏற்படும் லெபனான் பாராளுமன்ற சபாநாயகர் நபீ பேரி அறிவித்துள்ளார்.
இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றால், அது மத்திய கிழக்கு முழுவதையும் ஸ்தம்பிதமடையச் செய்யும். அது மட்டுமல்லாது அந்நிகழ்வு மூன்றாவது உலக மகா யுத்தமாகவும் மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்பன இது போன்ற தாக்குதல்கள் மூலம் பாதிக்கப்படும் எனவும் லெபனான் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment