Top News

கல்முனை மேயர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு!





கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட ஒரு வீதி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் கவனிப்பாரற்று காணப்படுகிறது.


வீதியின் பெயர்- நகர மண்ட வீதி கல்முனைக்குடி

பொறுப்பு வாய்ந்த நிறுவனம்- வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை.

பொறுப்பான உள்ளுராட்சி மன்றம்- கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்டது

மிகவும் பலமை வாய்ந்த இந்த வீதி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் செப்பனிடப் படாமல் கவனிப்பாரற்று மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வீதியால் பயணிக்கும் பாதாசாரிகள் மற்றும் நகர மண்ட வீதி எல்லையில் வசிக்கும் பெறும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 

மழைகாலங்களில் மழை நீர் தேங்கி குளங்கள் போல் காட்சியளிக்கின்றது காண்களில் நீர் வடிந்தோடாமல் தேங்கி நிட்பதால் துர் நூற்றாம் வீசி மகக்கள் பெறும் அசௌகரியத்துக்கு உள்ளாகின்றனர் மேலும் டெங்கு நுளம்புகள் பெறுகவும் வாய்ப்புள்ளது.

அரசியல்வாதிகளால் நகர மண்டப வீதியில் வசிக்கும் மக்களிடம், உங்களது வீதியை புனரமைத்து தருகிறோம் என்று பல தடவை வாக்குறுதி கொடுத்து வாக்குகளை பெற்றுச் சென்று பின்னர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக இல்லை.

கல்முனை பிரதேச பிரதி அமைச்சர் கெளரவ  எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி றகீப் மற்றும் 17ம் வட்டார கல்முனை மாநகர உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் மற்றும் எம்.ஐ.அப்துல் மனாப் மற்றும் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியளாளர் ஆகியோரின் அவசர கவனத்திட்கு.

நன்றி 
எஸ்.எச்.எம்.சஜாத்
கல்முனை நகர மண்டப வீதி வாழ் மக்கள் சார்பாக
Previous Post Next Post