Top News

கருத்துச் சுதந்திரத்தில் தலைமைக்கு என்ன வேலை?



இன்று ஒரு பிரச்சினை முஸ்லிம் உம்மத்தினுள் பிறந்து விட்டால் அதற்கு பல முப்திகளும் பல ஆலிம்களும் சில அறிவு ஜீவிகளும் சில உத்தமர்களும் தனக்கு தோனுவதற்கு ஏற்ப கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

கருத்துச் சொல்லவும் எங்களுக்கு உரிமையில்லையா? என்று கேட்டு தனது சிந்தனைக்கு படுவதையல்லாம் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஊர் மேய விடுகிறார்கள் சமூக தாளங்களில் . எல்லாருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு அது உலகலாவிய ஒரு விடயத்தில் மட்டும்தானே தவிர இஸ்லாத்தோடு பேசு பொருள் நீடித்தால் நிச்சயமாக அங்கே இஸ்லாமிய சட்டம் மாத்திரமே தாக்கம் செலுத்துதல் வேண்டும்.

இஸ்லாத்தின் சட்டத்தில் எவருக்கும் கருத்துச் சுதந்திரம் இல்லை. இஸ்லாம் சொல்வதுதான் சட்டம் .அதை நம் மூளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அதற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.அதை மறுப்பதோ அல்லது அந்த சட்டத்தை விட வேறு சட்டம் உண்டு என்பதோ அல்லது இஸ்லாமிய சட்டமும் நான் கூறும் சட்டமும் சமம்தான் என்பதோ அதில் விரும்பியதை தேர்வு செய்யலாம் என்பதோ குப்ரான ஒரு செயலாகும் என்பதை நினைவில் கொள்க. 

எனவே மார்க்கம் சார்ந்து ஒரு விமர்சனமோ கருத்தோ இருக்குமேயானால் ஒவ்வொருவரும் அதன் இஸ்லாமிய சட்டம் என்ன என்று அறிந்து அதன் அடிப்படையில் உங்கள் கருத்தை அமைத்துக் கொள்வதில் தவறு அல்ல. 

உலகலாவிய விடயங்களில் உங்களுக்கு கருத்து சொல்ல பூரண உரிமை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அதை தெறிவிக்கலாம். ஆனால் அந்த கருத்தில் இறுதி முடிவை தெறிவிப்பது யார்? 

ஹந்தக் போரின் போது அந்த போரை எப்படி எதிர் கொள்வது என்பது பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்க அதில் ஒரு கருத்தை இறுதி செய்தது அதன் தலைவர் உம்மத்தின் தலைவர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள்தான். அது போன்று குர்ஆன் தொகுக்கும் விடயத்திலும் உமர் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் அபூ பக்கர் ரழியல்லாஹு அவர்கள் சம்மதிக்கவில்லை ஆன போதும் தனிப்பட்டு முடிவெடுத்து உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை தொகுக்க முற்படவில்லை. இறுதி தீர்ப்பு முஃமீன்களின் தலைவரான அபூ பக்கர் ரழியல்லாஹு அவர்களிடமே எதிர் பார்த்தார்கள். 

அலி ரழியல்லாஹு அன்வர்கள் ஆட்சி தலை நகரான மதீனாவை விட்டு கூபாவை மாற்றிய போது பல ஸஹாபாக்களும் அதற்கு எதிராக கருத்து தெறிவித்தும் இறுதி முடிவு அன்றைய தலைவர் அலி ரழியல்லாஹு அவர்களிடமே இருந்தது. பெரும்பாலான ஸஹாபாக்களுக்கு முரன்பட்டு அவர் அந்த முடிவை எடுத்த போதும் முடிவு எடுக்கப்பட்ட பின் அதை எந்த ஸஹாபாக்களும் விமர்சித்து திரியவில்லை. 

நம்மை சிந்துத்து பாருங்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் ஆட்சி தலை நகரமாக ஆக்கிய மதினாவை விட்டும் கூபாவை தலை நகராக மாற்றினார்கள் . ஏன் முன் சென்ற அனைத்து கலிபாக்களும் அதைத்தான் தலை நகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். நாமாக இருந்தம்திருந்தால் எப்படியல்லாம் விமர்சித்திருப்போம். இறுதியில் நபிகளாருக்கு மாற்றமாக நடந்து கொண்டார் என்று காபிர் என்ற பட்டமும் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது இப்போது இருக்கும் கருத்துச் சுதந்திரம் அப்படிப்பட்டதே.

இப்படி இறுதி முடிவு தலைமையிடமே இருந்தது.அந்த தலமை ஒரு முடிவு எடுத்து விட்டால் பின்னர் அது தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதுதான் அழகிய இஸ்லாமிய உம்மத்துக்கு சொல்லப்படும் அழகிய பாடம். 

இவ்வளவு அழகிய வழிமுறைகளை இஸ்லாம் இந்த உம்மத்துக்கு தெளிவாக சொல்லி விட்டு சென்றிருக்க எம் முரண்பாடு தீர்ந்த பாடும் இல்லை.பொதுவான மார்க்க தலமை யார் என்று எவருக்கும் உறுதியில்லை. ஒரு தலமையின் கீழ் ஒன்றுபடாத சமூகம் நிச்சயம் உருப்படாது. 

Post a Comment

Previous Post Next Post