Top News

முசலி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் அழுத்தம்



மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது முசலி பிரதேச சபைக்கு தெரிவான புதிய சில உள்ளூர் அரசியல்வாதிகள் தன்னுடைய கடமையினை சிரான முறையில் மேற்கொள்ள விடாமல் பல அரசியல் ரீதியாக அழத்தங்களை பிரயோகிப்பதாக முசலி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் அறிகையில்;
ஒரு சமுர்த்தி பயனாளியாக இருந்தால் வருடாந்த சேமிப்புகள் ஆன புத்தாண்டு சேமிப்பு,புகைத்தல் எதிர்ப்பு தின சேமிப்பு, திரியமாதா சேமிப்பு போன்ற பல சேமிப்புகளை சமுர்த்தி பயனாளிகள் கட்டாயம் சேமிப்பினை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு சேமிப்புகளை மேற்கொள்ளுகின்ற போது தற்போது முசலி பிரதேச சபைக்கு தெரிவான சில உள்ளூர் அரசியல்வாதிகள் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வேளையினை உரிய முறையில் மேற்கொள்ள விடாமல் பல கட்ட சதிகளையும் மக்களை குழப்பும் சதிகளை மேற்கொள்ளுகின்றார்கள் என அறியமுடிகின்றன.
கடமை நேரத்தில் அலுவலக வேலைகளுக்கு தடையாக இருக்கின்ற புதிய உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக மன்னார் மாவட்ட சமுர்த்தி தொழில் சங்கம்,முசலி தொழில் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டங்களை கூட மேற்கொள்ள இருப்பதாகவும் அறியமுடிகின்றன.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது அரசியல் ரீதியாக அழத்தங்களை மேற்கொள்ளும் முசலி பிரதேச சபையின் சில புதிய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு இந்த உள்ளுர் அரசியல்வாதிகளின் நடவடிக்கையினை பார்த்து அப்பாவி மக்கள் அதன் கட்சி தலைமைகள் மீதும்,கட்சியின் மீதும் பல வகையான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள்.
முசலி பிரதேச சபைக்கு தெரிவான இவர்கள் இதுவரைக்கும் மக்கள் நல வேளை திட்டங்கள் ஒன்றைக்கூட மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post