Top News

அக்கறைப்பற்று மா.சபை பிரதி மேயர் அஸ்மி. ஏ கபூர் அவர்களுக்கு!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்கட்சி அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர்  ஏ.சீ. நுஹ்மான் அவர்கள் நேற்று அக்கறைப்பற்றில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையில்,

 கடந்த மாநகர சபைத்தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதய பிரதி மேயர் அஸ்மி. ஏ கபூர் அவர்களே, இதற்கு முன்னரான மாநகர சபைக் காலத்தில் தாங்கள் உறுப்பினராக இருக்கின்ற போது வெள்ளப்பாதுகாப்பபு வீதியில் காணப்படும்  மர ஆலைகள் அனைத்தும் பொது மக்களுக்கு இடைஞ்சலாகக் காணப்படுவதாகவும் அது சுகாதாரச் சீர்கேடாகக் காணப்படுவதாகவும் அதனை உடனடியாக வேறு பிரதேசங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதற்கான பிரேரணையும் முன்வைத்தீர்கள் எதுவும் நடைபெறவில்லை.

 அதனைச் சூழ பொது மக்கள் வாழந்து வரும் பிரதேசமாகவும் மற்றும்  அரச காரியாலயங்கள், பொது விளையாட்டு மைதானம், சிறுவர் நன்நடத்தைக் காரியாலயம், பிராந்திய வானொலியான பிறை எப்.எம்,  போன்ற காரியாலங்களும் காணப்படுவதனால் இவ்வாறான மரஆலைகள் தொடர்ந்தும்; இயங்கி வருகின்றதே தற்போது நீங்கள் அதிகாரம் வாய்ந்த ஒரு பிரதி மேயராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள் எனவே  இதற்கான உடனடித்தீர்வாக எதனை செயற்படுத்தப்போகின்றீர்கள் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக என்ன செய்யப் போகின்றீர்கள் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பிர் ஏ.சீ. நுஹ்மான் அவர்கள் கேட்டுக்கொண்டார்.





வேண்டுமென பிரேரணைகளை முன்வைத்தீர்கள் முடிவு எதையுமே காணவில்லை. தற்பொழுது நீங்கள் பிரதி மேயராக இருக்கிறீர்கள் இதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்?

பதவியா? 
மக்களா?


எஸ். எம் இர்சாத் 
கிழக்கு மாகாணம்.
Previous Post Next Post