ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த தவறாக செயல்கள் காரணமாகவே தான் அன்றைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் ராஜபக்சவினருடன் இணைந்து மீண்டும் அரசாங்கம் ஒன்றில் பணியாற்ற தான் தயாரில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியதை மக்கள் ஏற்றுக் கொண்டு விடடனர் என்பதால், மக்களுக்கு துரோகியாக முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதோ ஒரு காரணத்தினால், இரண்டு தரப்பும் மிண்டும் இணைந்து கொண்டால், அன்று போல், இம்முறையும் நெஞ்சை நிமிர்த்தி, நேரடியான தீர்மானத்தை எடுக்க போவதாகவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவினருக்கும் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த விரோதங்களும் இல்லை எனவும் அவர்களுடன் கொள்கை ரீதியான பிரச்சினை மட்டுமே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
Post a Comment