ரி.எம். இம்தியாஸ்
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஆதரவாக அரசு சார்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியதாக சமூக வலைத்தலங்களில் செய்தி பரவுவதை காண முடிகிறது.
இது தொடர்பில் ஐ.நாவிற்கு முஸ்லிம்கள் சார்பில் ஊடக செயற்பாட்டளாக சென்ற பஹத் ஏ.மஜீதினடம் வினவிய போது,
அமைச்சர் பைசர் முஸ்தபா ஐ.நா வந்ததது உண்மைதான், அங்கு முஸ்லிம்கள் தொடர்பில் அவரிடம் எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை,
அவர் வெளிவிவகார அமைச்சரோடு அருகில் அமர்ந்திருந்தார். இலங்கைக்கு சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதில் கூடுதலான நேரம் தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட திருப்தி கரமான நடவடிக்கைகைள் குறித்து ’பேசப்பட்டது பிறகு ஒரு சில வார்த்தைகள் முஸ்லிம்களின் விடயங்கள் குறித்து அமைச்சர் திலக் மாரப்பன பேசினார்.
இங்கு அமைச்சர் பைசர் முஸ்தபா எதுவும் பேசவில்லை,
ஐ.நா அமர்வு குறித்து அறியாதவர்கள் கண்டபடி பேசலாம்,
ஆனால் முஸ்லிம்களுக்கு நடைபெற்ற வன்முறைகளுக்கு காரணம் எது உன அமைச்சர் திலக் சொல்லியது பாிய இடியாக இருந்தது ஆனால் அதனை இலங்கை முஸ்லிம் சமூகம் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்த விடயத்தை இன்னுமொரு தடவை சொல்கிறேன் என்றார் பஹத்.