Top News

வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்களை இ.அ.சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை





வடமாகாண பாடசாலைகளில் கடமையாற்றும்  கடமை நிறைவேற்று அதிபர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் இன்று 
வ/மாங்குளம் மகா வித்தியாலயத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களை சந்தித்து தம்மை இலங்கை அதிபர் சேவைக்குள் உள்வாங்கப் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

வடமாகாணத்தில் இயங்கும் பன்னிரெண்டு கல்வி வலயங்களிலும் கடமையாற்றும் சுமார் 200 ற்கு மேற்பட்ட கடமை நிறைவேற்று அதிபர்கள் மிக நீண்டகாலமாக கஷ்ட மற்றும் அதிகஷ்ட பகுதிகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது பணிகளையாற்றி வருகின்றனர்.

நாட்டின் இதர மாகாணங்கள் பலவற்றிலும் பணியாற்றிய கடமையாற்றிய  நிறைவேற்று அதிபர்கள், இலங்கை அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட போதிலும் வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் இன்றுவரையும் அதிபர் சேவைக்குள் உள்வாங்கப் படாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளர்.

யுத்த காலங்களில் கொட்டில்கள் கட்டி வீடுவீடாக சென்று பிள்ளைகளை  அழைத்து வந்து ஆசிரியப்பணியோடு அதிபர் கடமைகளையும் இவர்கள் ஆற்றி வந்திருந்த நிலையில் இவர்களில் சுமார் பதினேழு பெயரளவில் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தது இலங்கை அதிபர் சேவைக்குள் உள்வாங்கப் பட்டிருந்தனர்.

இன்னும் சிலர் தமது கடமை நிறைவேற்று அதிபர் பொறுப்பிலிருந்து விடுபட்டு ஆசிரியப்பணிகளை தொடர்வதாகவும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிபர் சேவைக்குள் உள்வாங்க கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டனர்.

இவர்களுடைய கோரிக்கை கவனமாக செவிமடுத்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் இந்தவிடயம் தொடர்பில் வலியுறுத்தி அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்து குறித்த காலத்திற்குள் இந்த கடமை நிறைவேற்று அதிபர்களை இலங்கை  அதிபர்  சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகரும் முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமாரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

ஊடகப்பிரிவு.

Post a Comment

Previous Post Next Post