சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரவேலுக்கும் ஒரு பொது எதிரி காணப்படுவதாகவும், பலஸ்தீன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள கருத்து முரண்பாடே அந்த எதிரியாகும் எனவும் சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தி டைம்ஸ் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியொன்றுக்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சவுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்பொழுது சிறந்த நல்லுறவு நிலவிவருகின்றது. இதனால், சவுதிக்கு புதிய சீர்திருத்தமொன்றை அறிமுகம் செய்ய செயற்படவுள்ளதாகவும் இளவரசர் கூறியுள்ளார்.
பலஸ்தீன் நெருக்கடி தொடர்பில் இஸ்ரவேலுக்கும் சவுதிக்கும் இடையில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கும், இராஜதந்திர நடவடிக்கைளுக்கும் இந்த கருத்து வேறுபாடு பெரும் தடையாகவுள்ளது. பலஸ்தீன் தொடர்பில் காணப்படும் நெருக்கடி நிலைமையை விரைவாக தீர்த்துக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் இளவரசர் சல்மான் மேலும் அச்சஞ்சிகைக்குக் குறிப்பிட்டுள்ளார்.