அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரை தம்வசம் கவர்ந்திழுத்து பெரும்பான்மையை நிரூபிப்பதன் மூலம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாமென்பதே மஹிந்த அணியினரின் திட்டமாக இருந்தது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய நெருக்கடி, திகன வன்முறைகளால் உருவான பதற்றம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றெல்லாம் கடந்த சுமார் மூன்று மாத காலமாக அரசாங்கம் பெரும் சங்கடங்களையே கடந்து வந்திருக்கின்றது.
எனினும் ஒவ்வொரு நெருக்கடியையும் அரசாங்கம் மிக நிதானமாகவே கடந்து வந்திருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் கூடுதல் வெற்றியை ஈட்டிக் கொண்ட மஹிந்த ராஜபக்ச அணியினர், அத்தேர்தல் முடிவுகளை துரும்பாக வைத்துக் கொண்டபடி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பெருமுயற்சி மேற்கொண்டனர்.
கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே பிளவை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தை பலமிழக்கச் செய்வதற்கான முயற்சியும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுக்குப் பின்னர் இடம்பெற்றதைக் காண முடிந்தது.
எனினும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிந்திய சலசலப்புகள் சில நாட்களின் பின்னர் படிப்படியாகவே மறைந்து போய் விட்டன. மஹிந்த அணியினரின் திட்டங்களை அரசாங்கம் இலாவகமாகக் கையாண்டதுடன், அன்றைய நெருக்கடி நிலைமையை இலகுவாகவே கடந்து வந்துவிட்டது.
பாராளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற கூக்குரல்களும் ஒருவாறு அமுங்கிப் போய் விட்டன. அம்பாறை நகரிலும், கண்டி திகன பிரதேசத்திலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தன.
முன்னைய ஆட்சிக் காலத்தின் போது அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படட வன்முறை, ஆங்காங்கே பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ‘கிறீஸ்பூதம்’ என்ற போர்வையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து இடம்பெற்ற அச்சுறுத்தல்கள் என்றெல்லாம் நடந்துள்ள சம்பவங்கள் ஏராளம்.
எனினும் இன்றைய காலத்திலும் முஸ்லிம்கள் மீது அதே போன்ற வன்முறைகள் இடம்பெற்றமையானது அரசாங்கத்துக்கு சங்கடமானதொரு நிலைமையை ஏற்படுத்தியிருந்தன.
திகன, அம்பாறை ஆகிய இரு இடங்களிலும் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக அரசாங்கம் சந்தித்த நெருக்கடிகள் அதிகம், பல்வேறு தரப்புகளிலிருந்தும் அரசாங்கத்தை நோக்கி கண்டனங்கள் வந்த வண்ணமிருந்தன.
திகன வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் இருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்த போதிலும், மஹிந்த தரப்பினரான கூட்டு எதிரணியினர் அரசாங்கம் மீதே கண்டனப் பிரசாரங்களை மேற்கொண்டதைக் காண முடிந்தது.
முன்னைய ஆட்சிக் காலத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதை மறந்த நிலையில், இப்போது அம்பாறையிலும் திகனயிலும் இடம்பெற்றுள்ள வன்முறைகளுக்காக மஹிந்த அணியினர் அரசாங்கத்தைப் பரிகாசம் செய்தமை உண்மையிலேயே வேடிக்கை!
இத்தாக்குதல் சம்பவங்களைக் காரணமாக வைத்துக் கொண்டு அரசாங்கம் மீது முஸ்லிம்களை வெறுப்படைய வைப்பதற்கு மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ஏற்படுத்திய நெருக்கடியையும், அரசாங்கம் ஒருவாறு கடந்து வந்துவிட்டது.
மூன்று மாத காலத்துக்குள் அரசாங்கம் சந்தித்த மற்றைய நெருக்கடியானது பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகும்.
இலங்கையின் அரசியல் களத்திலும், நாட்டு மக்கள் மத்தியிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்படுத்தியிருந்த பரபரப்பு சாதாரணமானதல்ல. கடந்த சில மாதங்களாக செய்தி ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்துக் கொண்ட செய்தியும் இதுதான்.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க அகற்றப்பட்டு விடுவார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான நல்லிணக்கம் இத்துடன் முடிவுக்கு வந்து விடும். அரசாங்கம் சீர்குலைந்த பின்னர் மஹிந்த தரப்பினர் இலகுவாகவே பாராளுமன்றத்தைக் கைப்பற்றி விடுவார்கள்’ என்ற நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததையும் காண முடிந்தது.
அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைமையில் காணப்படுவதாக எதிரணியினர் பெரும் பிரசாரத்தையே நடத்தி வந்தனர்.எனினும் பிரதமர் தரப்பு இவற்றையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டதைக் காண முடியவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படுமென்ற உறுதியான நம்பிக்கையை ரணில் தரப்பு கொண்டிருந்ததையே காண முடிந்தது.நமபிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு அவ்வாறே அமைந்து விட்டது.
பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ரணிலுக்கு வெற்றி ஏற்பட்டுள்ளமை ஒருபுறமிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் அவரது தலைமைத்துவம் பலமடைந்திருப்பதையும் இப்போது அவதானிக்க முடிகின்றது.
கட்சியில் மாத்திரமன்றி, அரசாங்கத்திலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ரணில் இப்போது தயாராகி விட்டார். நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்படுத்திய நெருக்கடியையும் இலகுவாகவே தாண்டி வந்து விட்டது அரசாங்கம்.
இந்நிலையில் நாட்டின் அரசியல் நிலைமையானது ஒரு விடயத்தை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. எதிர்வரும் தேர்தல் வரை அரசாங்கம் ஸ்திரமான நிலைமையிலேயே பயணம் செய்யப் போகின்றது.
பிரதான இரு கட்சிகளான ஐ.தே.கவுக்கும், சு.கவுக்குமிடையிலான நல்லிணக்கப்பாடும் தடையின்றித் தொடரவே போகின்றது. அரசைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் எதிர்பார்க்கும் பலனைத் தரப் போவதில்லை.
இதனை வேறொரு விதத்தில் கூறுவதானால் நாட்டின் அரசியல் களத்தில் மஹிந்த அணியினர் பலம் இழந்த நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை!
எதிரணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் வளைத்தெடுப்பது என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இலகுவான அரசியல் கலையாக இருந்த போதிலும், இன்றைய சூழ்நிலையில் அம்முயற்சிகள் எதுவுமே பலனைத் தரவில்லை.