ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் இரண்டு கட்சிகளும் புதிய உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, உடன்படிக்கை குறித்த இணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பினை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் ஒப்படைத்துள்ளார்.
தாம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் நாடு திரும்பியதும் இந்த உடன்படிக்கை குறித்த வரைவுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு அது கடந்த டிசம்பர் மாதம் வரையில் அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment