பலஸ்தீன் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீதும் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் கண்டித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருக்கு தனது விசனத்தையும் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் ஓர் ஆக்கிரமிப்பாளர் எனவும், அவர் ஒரு பயங்கரவாதி எனவும் துருக்கி ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பலஸ்தீன் ஆர்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
பலஸ்தீன் மக்களை பச்சைப் பச்சையாக கொன்று குவிப்பதற்கு தூண்டுதல் வழங்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு பயங்கரவாதி எனவும், அவருக்கு எதிராக சர்வதேச சமூகம் கிளர்ந்தெழ வேண்டும் எனவும் துருக்கி ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.