Top News

மத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/ த பரீட்சையில் வெற்றி பெற சிறந்த வழிகாட்டல்கள் அவசியம்!



மத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா த பரீட்சையில் வெற்றி பெற சிறந்த வழிகாட்டல்கள் அவசியம். கொழும்பில் பின்தங்கிய  மாணவர்களை இலக்காக வைத்து; அவர்களின் தேர்ச்சி மட்டத்தையும், பெறுபேற்றையும், கல்வித் தரத்தையும் அதிகரிக்கும் நோக்கில்; ஆரம்பிக்கப்பட்ட CDDF ன் செயற்றிட்டம் வெற்றியளித்திருப்பதை கண்டு நாம் எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றோம். 

கொழும்பு மாணவர்களின் கல்விப்பிரச்சினை எமது சமூகத்தின் அடிப்படை பிரச்சினையாகும். அதனைத் தீர்ப்பதற்கு இந்த மக்களோடு மக்களாக வாழும் எங்களுக்கு இலகுவான காரியமாகும். இந்த மக்களின் வாழ்க்கையையும், இந்த மக்களின் இதயத்துடிப்பையும் நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள். எனவே இந்த மக்களின் பிள்ளைகள எதிர்நோக்கும்; கல்விப் பிரச்சினையை உணர்வுபூர்வமாக எங்களால் அணுக முடிகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறினார். 

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் கூட்டம் நேற்று கொழும்பு 10 அஷ்ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே பாராளுமனற் உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு பாடசாலைகளில கபொத சா த பரீட்சையில் சாதாரண மட்டத்தை விட குறைந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களை இலக்காக வைத்து நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்து அங்கத்தவர்களுக்கு ஏ.டப்லியூ.ஏ. அஸீஸ் ஆசிரியர் விளக்கமளித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த முஜீபுர் றஹ்மான் 

வகுப்புகளில் பின்தங்கியிருந்த மாணவர்கள் ஊனுனுகு இன் இந்த பயிற்சியினால் பயன்பெற்று 58 வீதமான மாணவர்கள் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர். இதை ஒரு வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது. இன்று குறைந்த பட்சம் சிற்றூழியராக அரசாங்க தொழில் ஒன்றைப் பெறுவதற்குக் கூட க.பொ.த. சாத பரீட்சையில் ஆகக்குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதில் இரண்டு பாடங்களில் ஊ சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அரச சிற்றூழியர் தொழிலுக்குக் கூட மத்திய கொழும்பு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை காரணம் அதிகமான இளைஞர்கள் பாடசாலையை இடை நடுவில் விட்டவர்களாகவும் அல்லது க.பொ.த. சாத பரீட்சையில் சித்திபெறாதவர்களாகவும் இருக்கின்றனர். 

இன்று எம்மிடம் தொழில் கேட்டு வரும் இளைஞர்களில் 20 பேரில் ஒருவர் மட்டுமே ஆறு பாடங்களில் சித்தியடைந்நவர்களாக இருக்கின்றனர்.  இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். கொழும்பு பாடசாலைகளில் வகுப்பில் பின்தங்கியிருந்த மாணவர்களை தெரிவு செய்து ஒரு குறுகிய கால பயிற்சி வழங்கி அவர்களில் 58 சத வீதமான மாணவர்களை வெற்றியடைய செய்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு உழைத்த ஆசிரிய குழாத்திற்கும், இந்த திட்டத்தை வெற்றியளிக்க நிதி மற்றும் ஆலோசனைகள் வழங்கிய  எமது அமைப்பின் உறுப்பினர்களான திருவாளர்கள் ஷிஹாப் ஸரீம், பஹார்தீன், மற்றும் சட்டத்தரணி யு.ஏ. நஜீம் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல தியாகங்களுக்கு மத்தியில் செயலாற்றிய CDDF அங்கத்தவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். 



இந்த வருடமும் கொழும்பு பாடசாலைகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வருட பயிற்சிக்காக கொழும்பு பாடசாலைகளில் தேர்ச்சி மட்டம் குறைந்த பின்தங்கிய மாணவர்களை  உள்வாங்கி அவர்களுக்கான சிறந்த பயிற்சிகளை வழங்கவும் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post