அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்த உலகில் பிறக்கிற எல்லா உயிர்களுக்கும் தங்களுக்கென்ற ஓர் குணாதியத்தை கொண்டிருப்பார்கள். பிறக்கும் போதே அவர்களில் நிறை குறை இருக்கும். வளரும் சூழலில் அதனை இன்னமும் மெருகேற்றிக் கொள்கிறார்கள்.
திறமைகள் தொடர்பான விஷயமென்றால் பெருமையாக சொல்லிக் கொள்வோம் இதே குறைபாடு என்றால்? சிம்பாபேயில் வடோமா என்ற ஓர் பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். இவர்களை ஆஸ்ட்ரிச் பீப்பிள் என்றே எல்லாரும் அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த மக்கள் எல்லாருக்குமே காலில் இரண்டே இரண்டு விரல்கள் தான் இருக்கிறது. இவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்கிறார்கள் இந்த மக்கள் எல்லாருக்குமே இரண்டு விரல்கள் கொண்ட கால் தான் இருக்கிறது.
வடோமா இன மக்கள் சிம்பாவேயின் மேற்கு பகுதியில் உருங்குவே மற்றும் சிப்போலியோ ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் வசிக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தான் ஜம்பேசி ஆறு ஓடுகிறது. பெரும்பாலும் இவர்கள் மக்கள் கூட்டத்தை விட்டு தள்ளியே இருக்கிறார்கள்.
இவர்களால் ஷூ மற்றும் செருப்பை பயன்படுத்த முடியாது. காரணம் காலில் வினோதமான வடிவில் இரண்டே இரண்டு விரல்கள் மட்டும் இருக்கின்றன. நடுவில் இருக்க வேண்டிய மூன்று விரல்களும் மிஸ்ஸிங்! இது ஒரு மரபணு குறைபாடு என்று சொல்லப்படுகிறது.
இப்படியான விரல்கள் இருப்பதால் இவர்களால் வேகமாக ஓட முடியாது. சிலருக்கு நடப்பதும் சிரமமாகவே இருக்கிறது.
ஆனால் இந்த கால்களின் உதவியுடன் சாதரண மனிதர்களை விட மிக வேகமாக மரம் ஏறுகிறார்கள். இவர்களுடைய முன்னோர்கள் விண்வெளியில் இருந்தவர்கள் என்றும் பூமியில் இருக்கக்கூடிய பெண்ணிடம் உறவு கொண்டு காலங்காலமாக பூமியில் அடுத்தடுத்த சந்ததியினருடன் பூமியில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள்.
இந்த மக்களை இரண்டு விரல் மக்கள் என்றும் ஆஸ்ட்ரிச் மக்கள் என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால் ஆஸ்ட்ரிச் பறவையின் கால்கள் இப்படித்தான் இருக்குமாம். இவர்களுக்கு இருகக்கூடிய இரண்டு விரல்களும் உள்கூட்டியே வளைந்திருக்கிறது. இவர்களை யாரும் ஊனமுற்றவர்கள் என்று சொல்வதில்லை
இந்த மக்கள் யாரும் பிறருடன்,பிற இன மக்களுடன் சேர்ந்து பழகுவதில்லை.தங்கள் மரபணுவுடன் பிற மரபணுக்களை சேரவிடுவதில்லை. இரட்டை விரலுடன் பிறப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள். வேறு இனத்தில் சேர்ந்து திருமண பந்தத்தில் இணைந்தால் இந்த இரட்டை விரல் மரபணு குலைந்துவிடும் என்று நினைப்பதும் ஒரு காரணம்.
அதோடு இயல்பாகவே இவர்களிடம் கூச்ச சுபாவம் அதிகம். பிறருடன் பேசுகையில் அவரின் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள் தலையை குனிந்து கொண்டு தான் பேசுவார்கள். இவர்களைப் போலவே கலாஹரி என்ற பாலைவனத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கும் இதே குறைபாடு இருக்கிறது.
Post a Comment