225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காகவே அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், மே மாதம் 7ஆம் திகதி சர்வதேச மே தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், முழு அமைச்சரவை மாற்றமொன்று விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுவரும் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.