ஹஸ்பர் ஏ ஹலீம்
தம்பலகாமம் பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமானது தவிசாளராக சீனித் தம்பி முஹம்மது.சுபியான்
உள்ளூராட்சி தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவு இன்று(12) தம்பலகாமப் பிரதேச சபையின் தெரிவும் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் தம்பலகாமப் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்போது எந்தவொரு கட்சியும் அருதிப் பெரும்பான்மை பெறாததால் பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர் தெரிவு இடம் பெற்றது இதன்போது முதலாவது சபை அமர்வில் கலந்து கொண்ட 16 உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்த தருணத்தில் பகிரங்க வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.சுபியான் சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் அறிவித்தார்.
இவருக்கு ஆதரவாக எட்டு வாக்குகளையும் எதிராக பிரேரித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.இமாமுக்கு ஏழு வாக்குகளும் கிடைக்கப்பெற்றன .பொதுஜன பெரமுன ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்து தவிசாளரை தெரிவு செய்தனர் இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்து ஙொள்ளாது நடுநிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரதி தவிசாளர் தெரிவு இடம் பெற்றது பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக எட்டு வாக்குகள் ஆதரவாக பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அம்பகே சம்பிக பண்டார தெரிவு செய்யப்பட்டார்.
இத் தம்பலகாம பிரதேச சபையின் தவிசாளரான இரண்டாவது முறையாகவும் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Post a Comment