கடந்த மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவே பொறுப்பு என தாய் நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அண்மைக் காலமாக பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் விடயம் என்றால் அந்த விடயத்தை சரத் பொன்சேகாவிடம் பிரதமர் ஒப்படைக்கின்றார்.
நான் சொல்லுவதனைப் போன்று இரு, நாம் சொல்லுவதனை பேசு இல்லாவிட்டால் உன்னை பிடித்துக் கொடுப்போம் என சரத் பொன்சேகாவை, ரணில் மிரட்டுகின்றார்.
சரத் பொன்சேகாவின் அலுமாரியை திறந்த பார்த்தால் லசந்தவின் எலும்புக்கூடு உள்ளது, கீத் நொயாரின் கைகளை கட்டுவதற்கு பயன்படுத்திய கையிறும் அதே அலுமாரியில் உண்டு.
ரிவிர ஆசிரியர் உபாலி தென்னகோனை தாக்குவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களும் அதே அலுமாரியிலேயே உள்ளது.
நான் மிகுந்த பொறுப்புடன் இதனைக் கூறுகின்றேன், கீத் நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகியோரை தாக்கியது சரத் பொன்சேகாவிற்கு அருகாமையில் இருந்த குழுவொன்றேயாகும்.
என்னிடம் அது குறித்த கோவைகள் உள்ளன. சரத் பொன்சோவின் சட்ட அதிகாரியாக நான் கடமையாற்றியிருக்கின்றேன் அவரது ஆவணங்கள் பல இன்னும் என்னிடம் உள்ளன என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.