முஹமட் நசீட்
முஸ்லிம் காங்கிரஸ் எனும் மிகப்பெரும் இயக்கம்தான் முஸ்லிம்களுக்காக முதலில் குரல்கொடுத்தது, ஆனால் இன்று அதன்மூலம் அரசியலுக்கு பிரவேசித்தவர்கள் அனைவரும் தங்களை தலைவர்கள் ஆக்கிக்கொள்ள ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்து விலகி்க்கொண்டனர் ஆனால் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே தாய்க்கட்சியென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தெரிவித்துள்ளார்.
இன்று தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சினேகபூர்வமாக சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நசீர் அவர்கள் ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் வழங்கினார், அதில் ஒரு கேள்வியாக ஹசனலி மீள கட்சிக்குள் வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.எல். நசீர்,
மு்ன்னாள் செயலாளர் ஹசனலி அவர்களுக்கு எப்போதும் கட்சியின் கதவு திறந்தே இருக்கும் என்றார், ஹக்கீம் எனும் தலைமை இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த வரம் எனக்குறிப்பிட்ட அவர், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கூட்டாக எதிர்காலத்தில் இயங்க வேண்டும் என்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க கட்சிக்காக உதவிய அனைத்து மக்களுக்கும் குறிப்பாக தீகவாபி உறுப்பினர் குமாரவுக்கும் நன்றி தெரவித்தார்.
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள், உள்ளக அபிவிருத்தி திட்டங்கள் கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்கள் என்பன கட்சித்தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக துரித கதியில் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.