Top News

சிங்கள இன மேலதிக ஆசிரியர்களால் பாதிக்கப்படும் தமிழின மாணவர்கள்!

Image result for தமிழ் மாணவர்கள்
File Image

தென் மாகாண அக்குரஸ்ஸ, மாத்தறை, தெனியாய, ஹக்மன கல்வி வலயங்களை உள்ளடக்கிய மாத்தறை மாவட்ட தமிழ் பேசும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையே ஆசிரியர் பற்றாக்குறையாகும்.
இது தொடர்பாக மாணவர்கள் முதல் கல்விப் பணிப்பாளர்கள் வரை இரகசியமாகவும், பகிரங்கமாகவும், தொலைபேசி மூலமாகவும் கலந்துரையாடல் ஊடாகவும் தகவல்களை திரட்டிய வண்ணமே உள்ளோம். இது பல்வேறு நபர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகும்.
நாம் அவதானித்த ஓர் விடயமே தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களில் கடந்த பல ஆண்டுகளாக தெனியாய வலயத்திற்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஏனைய வலய தமிழ் மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாக அதிபர்மார் வலயத்திற்கு பலமுறை அறிவித்தும் தொடந்தும் அப்பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
இப்புறக்கணிப்பிற்கு முன்வைக்கப்பட்ட ஓர் காரணி மிகக் கவலையாக உள்ளது. அதாவது மாத்தறை மாவட்ட அக்குரஸ்ஸ, மாத்தறை வலயங்களுக்கு ஒதுக்க வேண்டிய ஆசியர்களைவிட அதிக ஆசிரியர்கள் மேற்படி வலயங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் புதிய ஆசிய நியமனங்கள் குறித்த வலயங்களுக்கு வழங்குவதில்லை என்ற கூறப்படுகின்றது. குறித்த வலயங்களில் மேலதிக ஆசிரியர்களாக உள்ள அனைவரும் சிங்கள மொழிமூல ஆசிரியர்களாகும். ஆனால் பற்றாக்குறை உள்ளது தமிழ் மொழி  மூலப் பாடசாலைகளுக்காகும். என்ற உண்மை நமது தென்மாகாண கல்வி அமைச்சருக்கு புரிவதில்லை.
அதாவது உதாரணமாக அக்குரஸ்ஸ வலயத்திற்கு ஒதுக்க வேண்டிய ஆசிரியர் எண்ணிக்கை 500. அதில் சிங்கள மொழி மூலம் 350 ஆசிரியர்களும் தமிழ் மொழி மூலம் 150 ஆசிரியர்களும் தேவையாக உள்ளது. ஆனால் அதிகாரிகள் சிங்கள மொழி மூலம்  450 ஆசிரியர்களையும்,  தமிழ் மொழி மூலம் 100  ஆசியர்களையும் நியமித்துவிட்டு குறித்த வலயத்தில் 550 ஆசியர்கள் கற்பித்தல் நடவடிக்களில் ஈடுபடுகின்றனர். மேலதிகமாக 50 ஆசியர்கள் உள்ளனர் எனக் தமிழ் மொழி மூல ஆசியர்களுக்கு நியமனங்கள் வழங்க மறுக்கின்றனர்.
அதாவது தென்னிலங்கையில் சிங்கள மொழி மூல மேலதிக ஆசியர்களால், தமிழ் மொழி மூல மாணவர்கள்தான் பாதிக்கின்றனர். நல்லாட்சி என்ற பெயரில் நரகாட்சியை தொடர்கின்ற இவ்வரசு தென்னிலங்கை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமா????

Post a Comment

Previous Post Next Post