அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இணைந்து இன்று அதிகாலை சிரியாவின் மீது பாரியளவில் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என அமெரிக்க டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு வருட காலமாக இழுபறி நிலையில் சிரியா சிவில் யுத்தத்தில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், நேற்று (13) வெள்ளிக்கிழமை இரவும், இன்று (14) அதிகாலையிலும் மேற்கொண்ட ஏவுகணை மழைதான், மேற்கு நாடுகள் சிரியாவில் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய தலையீடு என சர்வதேச உறவு தொடர்பான அவதானிகள் விமர்சித்துள்ளனர்.
இந்த சிரியாவின் மீது மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் இந்த தாக்குதல் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலாகவும் வர்ணிக்கப்படுகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் சிரியாவிலுள்ள அரசாங்க எதிர்ப்பு குழுக்களுக்கு உதவி வருகின்றன.
இதேவேளை, பசீர் அல் ஆஸாதிற்கும், அவரது அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ரஷ்யா உதவி வழங்கி வருகின்றது. ரஷ்யாவானது சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment