Top News

காஷ்மீர் சிறுமியின் குடும்பம் மற்றும் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு!’ - நீதிமன்றம் உத்தரவு


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

காஷ்மீர் சிறுமியின் குடும்பம் மற்றும் அவரது வழக்கறிஞர் தீபிகா ஆகியோருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என இந்திய
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, ஜனவரி மாதம் கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுத்த 8 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். ஓய்வு ஆசிரியர், அவரது மகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 8 பேரின் கொடூரச் செயலுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், சிறுமியின் தரப்பில், வழக்கறிஞர் தீபக் சிங் ராஜவாட் வாதாடுகிறார். இந்த வழக்கில், 8 பேரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post