அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபையினால் வழங்கப்படும் நீர் விநியோகம் அடிக்கடி, முன்னறிவித்தல்களின்றி துண்டிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சிலவேளைகளில், காலை முதல் இரவு வரை முன்னறிவித்தல்களின்றி நீர் துண்டிக்கப்படுகின்றது.
நேற்று சனிக்கிழயும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் முதல் – இரவு வரையும் நீர் துண்டிக்கப்பட்ட போதும் (இந்தச் செய்தி எழுதப்படும் போதும் நீர் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது), இது குறித்து எவ்வித முன்னறிவிப்புகளும் செய்யப்படவில்லை.
மக்களின் அடிப்படைத் தேவையான நீரை வழங்குவதில், இவ்வாறு அலட்சியப் போக்குடன் செயற்படுகின்றமையினை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீர் வெட்டு குறித்து முன் அறிவிப்புச் செய்தால், மக்கள் நீரைச் சேமித்து, மிகவும் சிக்கனமாக பாவிப்பதற்கு முயற்சிப்பார்கள்.
இதேவேளை, பள்ளிவாசல்களில் ‘வுழு’ செய்வதற்கு நீரின்றி மக்கள் பெரிதும் அசௌகரியங்களை, நேற்றும் இன்றும் எதிர்கொண்டமையினையும் காணக்கிடைத்தது.
எனவே, இவ்வாறான நீர் வெட்டு குறித்து முன் அறிவித்தல் வழங்காத, நீர் வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை அலுவலக அதிகாரி மீது, சபையின் மேலதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை, எதிர்காலத்தில் முன் அறிவித்தல் செய்த பின்னரே, நீர் வெட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
TM Imthiyas addalaichenai
Post a Comment