Top News

நீதிமன்றக் கட்டடத்தொகுதிக்குள் திடீரென தீ!

Related image

பண்டாரவளை நீதவான் நீதிமன்றின் இன்றைய தினம் காலை திடீரென தீப்பற்றியுள்ளது.

நீதிமன்றின் தகவல் அறையில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பண்டாரவளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவ இடத்திற்கு அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post